கரூர் அருகே பயங்கரம் - செல்போன் வெடித்ததால் தீ விபத்து... தாய், 2 மகன்கள் உடல் கருகி உயிரிழப்பு

கரூர் அருகே செல்போன் வெடித்து தீப்பிடித்ததால் தாய், இரண்டு மகன்கள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

  • Share this:
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனேந்தல் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி, தனது இரண்டு மகன்களுடன் கடந்த சில ஆண்டுகளாக கரூர் ராயனூர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த சூழலில், இன்று அதிகாலை முத்துலட்சுமியின், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது. முத்துலட்சுமி முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.அவரது 3 வயது மகனான ரஞ்சித்தும், 2 வயது மகனான தட்சித்தும், படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

Also read... கொரோனா தடுப்பு பணிகளில் திமுக என்ன செய்தது? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

முதற் கட்ட விசாரணையில் முத்துலட்சுமி இரவில் சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.அதேசமயம், கணவரை பிரிந்து வாழும் முத்துலட்சுமி, தனது பெற்றோரை ஊருக்கு அனுப்பி இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading