ஸ்கூட்டரில் சென்ற தாய், மகள் சாலையோரம் சாக்கடையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு..

சாக்கடையில் விழுந்து விபத்துக்குள்ளான இடம்

நொளம்பூர் சர்வீஸ் ரோட்டில் உள்ள மிட் நைட் தாபா உணவகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தாய் கேரோலின் பிரிசில்லா மற்றும் மகள் ஈவாலின் ஆகிய இருவரும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தனர்.

 • Share this:
  மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் திறந்த வெளியில் ஓடும் மழைநீர் வடிகாலில் விபத்துக்குள்ளாகி கால்வாயின் உள்ளே இருந்த நச்சு கலந்த கழிவு நீரில் சிக்கி தாய் மகள் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அதனையடுத்து ஜே ஜே நகர் தீயணைப்பு மீட்புப் படையினர் உடலை மீட்டு நொளம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடந்தது விபத்தா அல்லது சாலையில் ஓரத்தில் உள்ள சேற்றில் வழுக்கி கீழே விழுந்தார்களா என்ற கோணத்தில் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  சென்னை முகப்பேர் அடுத்த அயனம்பாக்கம் எஸ்.வி ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா வயது 50. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 20 வயதில் ஈவாளின் என்ற மகளும் 15 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.

  கரோலின் பிரிசில்லா பிரபல தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் இவாளின் கட்டிடக்கலை படிப்பில், மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பு படித்து வருகிறார். கரோலின் பிரசில்லா மற்றும் ஈவாலின் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகம் நோக்கி மொபெட்டில் சென்றுள்ளனர்.

  மேலும் படிக்க.. Colleges Reopening | தமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..

  அப்போது நிலை தடுமாறி அருகில் இருந்த நெடுஞ்சாலைத்துறை மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தாம்பரம் முதல் புழல் வரை உள்ள இந்த பைபாஸ் சாலையின் பக்கவாட்டு சாலையில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. ஆனால் இது சாலையோடு ஒட்டி பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் தாயும் மகளும் கால்வாயில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

  சம்பவம் நடந்த இடத்தில் மின்விளக்கு கிடையாது. மழைநீர் வடிகால்வாய் முறையாகப் பராமரிக்கவில்லை. அதற்கு ஸ்லாப் போட்டு மூடவும் இல்லை. மேலும் நள்ளிரவில் சட்டவிரோதமாக கழிவு நீர் கொண்டு வந்து மழை நீர் வடிகால்வாயில் கலப்பதாகவும் அங்குள்ள பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: