சென்னை நொளம்பூரில் தாய், மகள் உயிரிழந்த விவகாரம்.. கரோலினின் தந்தையை போலீசார் மிரட்டியதாக புகார்

Youtube Video

சென்னை தாம்பரம் அடுத்த நொளம்பூரில் தாய், மகள் விபத்துக்குள்ளாகி மழை நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அவர்களது குடும்பத்தினரை மிரட்டி போலீசார் கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 • Share this:
  நொளம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 6-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியை கரோலின் மற்றும் அவரது மகள் ஈவாலின் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தனர். இவ்விபத்திற்கு 9 அடி ஆழம் கொண்ட மழைநீர் கால்வாய் மூடப்படாமல் இருந்ததும், அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் விபத்து குறித்து கரோலினின் தந்தை தாஸிடம் வெற்று காகிதத்தில் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கையெழுத்து வாங்க முற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கரோலினும், ஈவாலினும் அதிவேகமாக வந்ததால் விபத்துக்குள்ளானதாக எழுதி கையெழுத்து போடுமாறு தாஸை வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை போலீசார் மிரட்டியதாகவும் தாஸ் கூறியுள்ளார்.

   

  இதனை அடுத்து உடலை கொடுக்கக் கூட அலைக்கழிப்பார்களோ என்ற அச்சத்தில், போலீசாரின் விருப்பப்படி எழுதி கொடுத்த பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததாக தாஸ் கூறுகிறார். இந்நிலையில் தாஸின் புகார் குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கும் பட்சத்தில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: