சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி நகர் தேனம்மை ஊரணி தெருவைச் சேர்ந்தவர் செல்வி சோபானா. கணவரை இழந்த இவர், 24 வயதான அபிராமி மற்றும் 20 வயதான சிவானி ஆகிய இரு மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகள் அபிராமி, பிஎஸ்சி ஐடி முடித்துள்ளார். இளைய மகள் சிவானி மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி இயங்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளனர். தாயும் இரு மகள்களும் அக்கம்பக்கத்தினர் யாரிடமும் பழகுவதோ பேசுவதோ கிடையாது என்று கூறப்படுகிறது.
மூத்த மகள் அபிராமி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. செல்வி சோபனாவின் தங்கை, அக்கா வீட்டிற்கு எதிரில் குடியிருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலையில் வெகுநேரமாகியும் செல்வி சோபனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.
அப்போது செல்வி சோபனாவும் மகள் சிவானியும் சேலையில் தூக்கிட்டு இறந்த நிலையிலும் அபிராமி கட்டில் அருகில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையிலும் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் மூவர் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க...8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..
அபிராமி கொலை செய்யப்பட்டாரா? மற்ற இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது அவர்களும் கொலை செய்யப்பட்டனரா? மூவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.