Home /News /tamil-nadu /

மதுரையில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90% வடமாநிலத்தவர்கள்!

மதுரையில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 90% வடமாநிலத்தவர்கள்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை உட்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
மதுரையில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கானத் தேர்வில், வடமாநிலத்தவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

நாடுமுழுவதும், ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. சென்னை உட்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில், 90 சதவீதம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் குறைவானவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே துறை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்காததே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Indian Railways

அடுத்த செய்தி