துப்புரவு பணியாளராக இருந்த அதே ஊரில் இன்று உள்ளாட்சித் தலைவர்..! 21 முதல் 82 வரை சாதித்த பெண்கள்

Local Body Election Results |

துப்புரவு பணியாளராக இருந்த அதே ஊரில் இன்று உள்ளாட்சித் தலைவர்..! 21 முதல் 82 வரை சாதித்த பெண்கள்
News18
  • News18
  • Last Updated: January 3, 2020, 8:54 AM IST
  • Share this:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துப்புரவு பணியாளராக இருந்த சரஸ்வதி என்ற பெண் அதே ஊராட்சியில் தலைவராக போட்டியிட்டு வென்றுள்ளார். உள்ளாட்சியில் வெல்ல வயது ஒரு தடையல்ல என நிரூபித்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய சரஸ்வதி, தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு அதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே தனது அரசு பணியான துப்புரவு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிட்டார்.

ஆனால் தேர்தல் நடைபெறாத நிலையில் வேறுவழியின்றி அதே ஊராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது நடந்த தேர்தலில் 1,113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


அதைத்தொடர்ந்து , சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டியில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதான பிரீத்தி வெற்றி பெற்றார். தொலைதூரக் கல்வி மூலம் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் பிரீத்தி பாமக வேட்பாளர் பூங்கோதை செல்வத்தை விட 1,050 வாக்குகள் அதிகம் பெற்றார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூசலாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட இளம் பட்டதாரியான 22 வயதான சுபிதா வெற்றி பெற்றார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவியான 80 வயது விசாலாட்சி வெற்றி பெற்றார். ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்ட அவர் 341 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

 
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading