• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூரில் 2 மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

கடலூரில் 2 மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

கடலூரில் தனது மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

கடலூரில் தனது மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்!

கடலூரில் தாய் சிவசங்கரி தூக்க மாத்திரை கொடுத்தபின் 2 குழந்தைகளின் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூரில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் 2 மகன்களின் சடலமும், அதற்கு அருகிலேயே தூக்கிடப்பட்ட நிலையில் தாயின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

கடலூர், பாதிரிகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் மதிவாணன் - சிவசங்கரி தம்பதி.இவர்களுக்கு 12 வயதில் பாவேஷ் கண்ணா, 8 வயதில் ரதீஷ் கண்ணா என்ற 2 மகன்கள் இருந்தனர்.

மதிவாணன் மருந்து விற்பனையகம் நடத்தி வருகிறார். கணவன் மனைவி இடையே, கடந்த ஒரு ஆண்டாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு 10:30 மணிக்கு வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்ததாகவும், அப்போது சிவசங்கரி தூக்கில் தொங்கி கொண்டிருத்ததாகவும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் மதிவாணன் கூறியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு தரையில் பாவேஷ், ரதீஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரின் சடலங்களின் மீதும் மலர் தூவப்பட்டு கிடந்தது.

தகவல் அறிந்து வந்த திருப்பாதிரிபுலியூர் காவல்நிலையத்தினர், 3 பேரின் உடல்களையும் உடற்கூறாய்விற்கு கொண்டு சென்றனர். இதனிடையே தாய், தங்கை, மாமா மற்றும் காவல்துறைக்கு சிவசங்கரி எழுதி வைத்திருந்ததாக கூறப்படும் கடிதமும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் மிகவும் பொறுமையானவரான தனது கணவர் மதிவாணனனுக்கு அதிகம் தொந்தரவு கொடுத்துவிட்டதால் சாகப்போவதாகவும், கணவருக்கு மேலும் தொல்லைக் கொடுக்கக்கூடாது என்பதற்காக தனது மகன்களையும் அழைத்துச் செல்வதாகவும் உள்ளது.

தனது சாவுக்கு யாரும் காரணமல்ல என்றும் தங்களின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய வேண்டாமென்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இவ்விகாரம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ள போலிசார், தூக்கு மாத்திரை கொடுத்தபின் 2 குழந்தைகளின் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Also see... அவதூறு பரப்பும் முன்னாள் காதலன் - நடிகை புகார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: