• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியது... விவசாயிகள் வேதனை

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியது... விவசாயிகள் வேதனை

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியது

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியது

தமிழகத்தில் பெய்தும் வரும் கனமழை காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

  • Share this:
    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை நேற்று காலை வரை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சாகுபடி மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆறுகள் வாய்க்கால்களில் முழு கொள்ளளவில் மழைநீர் சென்று கொண்டிருப்பதால் வயல்வெளிகளில் இருந்து தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பெரம்பூரில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தில், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5000 மூட்டை நெல், அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. போதிய மேற்கூறை வசதி இல்லாததால் 1,000 மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைத்து, முளைத்துள்ளன.

    தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி, குளத்தூர், வேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,800 ஏக்கரில் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகின்றன.

    இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சதுப்பேரி கிராமத்தில் உள்ள ஏரி 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால், கிராம மக்கள் கிடா வெட்டி வழிபாடு செய்தனர். பின்னர் ஏரி அருகே அவர்கள் பொங்கலிட்டு கொண்டாடினர். ஏரி நிரம்பியதால் ஆயிரத்து 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: