எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை

திருவள்ளூரில் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் பணம் கடத்தி வந்த மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை
கோப்புப் படம்
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையின்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கத்தைக் கத்தையாக பணம் சிக்கியுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஸ்டிக்கர் ஒட்டியவாறு ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வந்த சொகுசுக்காரை, போலீசார் மடக்கி சோதனையிட்டபோது, அதிலிருந்து மூவர் தப்பி ஓட முயன்றிருக்கின்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வாகனத்தை முழுமையாக சோதனையிட்டிருக்கின்றனர். அதில் 4 பைகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்துள்ளது.

பின்னர் அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.


Also read: கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே ஷாம்பூ தயாரிக்க டிப்ஸ்

யாருக்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் பிடிபட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading