முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "வடமாநிலத்தவர் தமிழ்நாடு வருவது ஒருவித போர் தொடுப்புதான்"- சீமான் பரபரப்பு பேச்சு

"வடமாநிலத்தவர் தமிழ்நாடு வருவது ஒருவித போர் தொடுப்புதான்"- சீமான் பரபரப்பு பேச்சு

சீமான்

சீமான்

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து பேசியது தனது கருத்து இல்லை மக்கள் கருத்து என கூறினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagercoil, India

வடமாநிலத்தவர்கள் தமிழகம் வருவது ஒரு வித போர் தொடுப்பு என்றும் 5 ஆண்டுகளில் ஒன்றரைக்கோடி வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்துள்ளனர் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், இடைத்தேர்தலில் நாங்கள் தான் வெல்லுவோம், நாங்கள் தான் வெல்ல வேண்டும். மக்கள் மாற்றத்தை எண்ணிவிட்டால் அதை மக்களே செய்வார்கள் என கூறினார்.

மேலும் சில கட்சிகள் காசு ஒரு சுற்று நாங்கள் கொடுத்து விட்டோம் என்று எங்களிடமே கூறுகிறார்கள். கடைசி 3 நாட்களில் நாங்கள் பார்த்து கொள்வோம் என்று ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். சிலர் தானாக மாறுவார்கள், சிலவற்றை நாம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டணியில் சேர மாட்டேன், அது தனது கொள்கை முடிவு என தெரிவித்த அவர், பேனா குறித்து பேசியது தனது கருத்து இல்லை மக்கள் கருத்து என கூறினார். மேலும் அதிகாரம் உங்களிடம் இருக்கும்போது மக்களின் கருத்தையும் மீறி பேனா வைப்பீர்கள் என்றால் அதிகாரம் எங்களிடம் வந்தால் உடைப்போம் என கூறினார்.

தொடர்ந்து பேனா சிலை வைப்பது குறித்து தொட்டால் நான் போராட்டத்தை துவங்குவேன் என தெரிவித்த அவர், வடமாநிலத்தவர்கள் தமிழகம் வருவது ஒரு வித போர் தொடுப்பு என்றும் 5 ஆண்டுகளில் ஒன்றரைக்கோடி வடமாநிலத்தவர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர் என தெரிவித்தார்.

First published:

Tags: Migrant workers, Migrants, Seeman