• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேடை அமைத்து காத்திருந்த தொண்டர்கள்.. கையசைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்...!

மேடை அமைத்து காத்திருந்த தொண்டர்கள்.. கையசைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்...!

கையசைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்

கையசைத்துவிட்டு சென்ற ஸ்டாலின்

ஸ்டாலின் வருகைக்காக மேடை அமைத்து அதில் ஆடல் பாடல், நடனம் ,நிகழ்ச்சி நடத்தியும் ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்டாலின் வருகைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்த நிலையில் காரை விட்டு ஸ்டாலின் இறங்காமல் சென்றதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்க்க நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 8-ம் தேதி சிவகங்கை மாவட்டமான திருப்புத்தூர் அருகே உள்ள வைரவன் பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கு கலந்து கொள்ளுவதற்கு நேற்று மாலை விருதுநகரில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு மதுரை ரிங் ரோடு வழியாக சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் வழியாக திருப்பத்துர் செல்லுகின்றார் ஸ்டாலின்.

    Also read... பூட்டப்பட்ட கழிவறையில் 20 நிமிடம் சிக்கிய நபர்... பூட்டை உடைக்க படாத பாடுபட்ட திமுக பிரமுகர்கள்...!

    அந்த வழியாக செல்லும் போது திமுக சார்பில் அங்கு மக்களிடத்தில் ஸ்டாலின் வருகை புரிந்து பேசுவதற்கு மேடை அமைக்கப்பட்டு இருந்து. 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பொது மக்க்கள் காத்திருந்னர். ஆனால் நேற்று இரவு ஸ்டாலின் வந்த வாகனம் நிற்காமல், ஸ்டாலின் கை மட்டும் அசைத்து சென்றதால் காத்திருந்த பொது மக்கள் அதிருப்தி அடைந்னர்.



    ஸ்டாலின் வருகைக்காக மேடை அமைத்து அதில் ஆடல் பாடல், நடனம் ,நிகழ்ச்சி நடத்தியும் ஏமாற்றத்துடன் சென்றனர் பொதுமக்கள்.

    மேலும் திமுக சார்பில் திருப்புவனம் பகுதி முழுவதும் நேற்று காலையில் இருந்து சமூக வலைதளம் மூலமும், ஆட்டோ மூலமாக தெரு தெருவாக ஸ்டாலின் வாரார் உரையாற்ற போராரர் என்று விளம்பரபடுத்திய நிலையில் ஸ்டாலின் வாகனம் நிற்காமல் சென்றது ஏமாற்றத்தை அளித்தாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: