Home /News /tamil-nadu /

கண்டிப்பு ஒருவருக்கு... சோகம் இருவருக்கு...! சீர்காழி பள்ளிகளில் இரட்டையர்களால் தினம்தோறும் சுவாரஸ்யம்

கண்டிப்பு ஒருவருக்கு... சோகம் இருவருக்கு...! சீர்காழி பள்ளிகளில் இரட்டையர்களால் தினம்தோறும் சுவாரஸ்யம்

சீர்காழியில் வெவ்வேறு பள்ளிகளில் 80க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் சுட்டி சேட்டையால் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே சிரிப்பலை ஓசை ஆட்பரிக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியான சபநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதேபோல் தனியார் பள்ளியான விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆயிரத்திற்கும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த இரண்டு பள்ளிகளிலும் ஆண்டுதோறும் சேர்ந்து படிக்கும் இரட்டையர் ஜோடிகளும் அதிகரித்து வருகிறது.

இந்த இரண்டு பள்ளிகளிலும் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் எண்ணிக்கை 83 ஜோடியாம். இந்த இரட்டையர்கள் வீட்டிலும், வகுப்புகளிலும் செய்யும் சுட்டித்தனமான சேட்டைத்தனத்தில் ஒற்றுமையில் வேற்றுமை காண முடியாமல் அல்லாடும் ஆசிரியர்களின் நிலைக்கண்டு மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் நகைச்சுவை கலந்த சிரிப்பலை சத்தம் இல்லாத நாட்களே இல்லை என்கின்றனர் சகமாணவர்கள்.



அப்படி என்னதான் இரட்டைப் பிறவிகளின் ஒற்றுமை இரகசியம் என்பதை பார்க்கும் போது, முதலில் பள்ளியில் சேர்க்கும் இரட்டையர்களின் பெற்றோர்கள் வைக்கும் முதல் கோரிக்கை இருவரும் ஒரே வகுப்பில் இருக்க வேண்டும் என்பது தான். இருவரையும் எக்காரணத்தை கொண்டும் பிரிக்க கூடாது. இணைந்தே பிறந்த இருவரும் பிறப்பிலிருந்தே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் ஒருவரை பிரிந்து ஒருவர் இருந்தது இல்லை.



உதாரணமாக ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்த சிலமணி நேரத்தில் மற்றொருவருக்கும் உடனே காய்ச்சல் வந்து விடும். இது தவிர அணியும் ஆடைகள் முதல் உண்ணும் உணவு வரை, ஒரு சேர இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாகும். பல விதமான செயல்பாடுகளில் இவ்வாறு இரட்டையர்களில் ஒற்றுமை இருப்பதாக மகிழ்ச்சியோடு சுட்டிகாட்டுகின்றனர் பெற்றோர்கள்.

கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து பள்ளியில் சேருகின்ற இரட்டையர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொண்டே வருவதாகவும், குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டுமே அதிக அளவு இரட்டையர்கள் உள்ளதாகவும் ஆசிரியர் தங்கவேல் கூறுகிறார். இதற்கான காரணத்தை ஆராய வேண்டும் எனவும், தங்கள் பள்ளியில் படிக்கும் இரட்டையர்களை கண்டு பெருமையாக நினைப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.



மேலும், தங்கள் பள்ளியில் படிக்கும் இரட்டையர்களுக்கு பரிசளிக்க பொறியாளர் ஒருவர் வைப்புநிதி வைத்துள்ளார். அந்த நிதியில் இருந்து ஆண்டுதோறும் இரட்டை குழந்தைகளுக்கு பரிசளித்து வருவதாகவும் கூறுகிறார் ஆசிரியர் தங்கவேல். இரட்டையர்கள் என்பதால் காய்ச்சல் வந்தால் இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் வருவதாகவும், இருவரும் சாதாரன விஷயங்களுக்கு அடித்துக் கொண்டு சண்டை போட்டுகொள்வோம். ஆனால், அடுத்த 10 நிமிடங்களுக்குள் உடனே பேசிவிடுவோம் எனவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து சென்று விடுவோம் என இரட்டையர்கள் கூறுகின்றனர்.

ஒருவரை கண்டிக்கும் போது மற்றொருவரின் முகம் சோர்ந்து தன்னை திட்டுவது போலவே உணரும் நிலைபாட்டை காண்பது சற்று வேதனைக்குரிய விசயம் தான். இரட்டையர்களை கண்டுபிடிப்பதில் குழம்புவது ஆசிரியர்கள் மட்டும்மல்ல, சில நேரங்களில் நண்பர்களும் தான். நண்பனிடம் சற்று பேசிய பின்னர் தான் நான் அவன் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. இப்படி இரட்டையர்களின் சுட்டி தர்பாரால் சக மாணவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
Published by:Sankar
First published:

Tags: Nagai, Sirkazhi

அடுத்த செய்தி