• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிவதில்லை: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

சென்னையில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிவதில்லை: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் கொரோனா பாரவல் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில் மிகவும் அலட்சியமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா பாரவல் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில் மிகவும் அலட்சியமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாத இறுதியில் ஒரு வாரம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சென்னையின் குடிசைப்பகுதிகளிலும், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.

    முகக்கவசம் தொடர்பான இந்த ஆய்வு சென்னையில் 64 தெருக்களில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என்பது தெரிய வந்துள்ளது. காய்கறி கடைகளில் மக்கள் அருகருகே நின்று பொருட்கள் வாங்குவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, குடிசை பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் முகக்கவசத்தை அணிவதே இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

    இதேபோல, மற்ற பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை என்றும் சராசரியாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதும் கண்டறியப் பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணிபவர்களிலும், கணிசமானவர்கள் அதை உரிய முறையில் அணிவதில்லை. மூக்கு மற்றும் வாய் பகுதியை முகக்கவசம் மூடி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விட்டு வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    வீட்டை விட்டு வெளியே செல்பவர்களில் குடிசை வாசிகள் 56 சதவீதம் பேரும், வசதிபடைத்தவர்களில் 53 சதவீதம் பேரும் முகக் கவசத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்பவர்கள் முகக்கவசத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது.

    Must Read :  திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல்

     

    இந்நிலையில், இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இதனால், முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: