நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் தொடர்ச்சியாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பப் படிவங்கள் தி நகரில் உள்ள அகரம் அறக்கட்டளையில் வழங்கப்பட்டு வருகின்றன.
Also read: இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சினை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி
செப்டம்பர் 15ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்த விண்ணப்பப் படிவங்கள் இரண்டு நாட்கள் கூடுதலாக இன்றும் நாளையும் வழங்கப்பட்டு வருவதால் அதிக அளவிலான மாணவர்கள் படிவங்களைப் பெற்று வருகின்றனர்.
செப்டம்பர் 14ம் தேதி வரை 3,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை கல்வி உதவித்தொகைக்காக மொத்தம் 7,000 மாணவ, மாணவிகள் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Agaram Foundation