முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசுப் பள்ளிகளில் ஒரே ஆண்டில் 7 லட்சத்தை நெருங்கிய மாணவர் சேர்க்கை!

அரசுப் பள்ளிகளில் ஒரே ஆண்டில் 7 லட்சத்தை நெருங்கிய மாணவர் சேர்க்கை!

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உபரி ஆசிரியர் பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் அரசு பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உபரி ஆசிரியர் பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் அரசு பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும்.

மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உபரி ஆசிரியர் பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் அரசு பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும்.

  • 1-MIN READ
  • Last Updated :

    நடப்பு கல்வியாண்டில் அரசுபள்ளிகளில் 6,73,000-க்கும் அதிகமான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

    தொடர்சியாக அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்ப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் நடப்பு கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கடந்த கல்வியாண்டில் 46,50,671ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 53,24,009 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில் 1ம் வகுப்பில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 3,93,285 மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Also read... பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்கள்: கல்வி அதிகாரிகள் சென்னையில் முக்கிய ஆலோசனை!

    கடந்த 2 ஆண்டுகளில் கொரொனாவால் பொது மக்களின் பொருளாதார சூழலில் ஏற்ப்பட்ட தாக்கமே தனியார் பள்ளிகளுக்கு  கட்டணம் செலுத்தும் வலிமை குறைந்து  அரசு பள்ளிகளை நோக்கி பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க காரணமாக முன்வைக்கப்படுகிறது.

    Also read... அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி!

    மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உபரி ஆசிரியர் பிரச்சனை தீர்க்கப்படுவதுடன் அரசு பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 37,554 அரசுபள்ளிகளில் 53,24,009 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

    First published: