• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்துக்கு வந்த 5.88 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: பொதுமக்களுக்கு செலுத்தும் பணி மும்முரம்

தமிழகத்துக்கு வந்த 5.88 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்: பொதுமக்களுக்கு செலுத்தும் பணி மும்முரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

புனேவில் இருந்து விமானம் மூலம் 5.88 லட்சம் கோவீஷீல்டு  கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலைய வந்தடைந்தன.

  • Share this:
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவீஷீல்டு தடுப்பூசியும்  பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மக்களின் வீடுகளை தேடி வரும் மருந்து, மாத்திரைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!


    மேலும், தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை  கொள்முதல் செய்தும் வருகிறது. இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 49 பார்சல்களில் 5.88 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. இதனுடன் சேர்த்து இதுவரை 2 கோடியே 4 லட்சம் தடுப்பூசி வந்துள்ளன.

    மேலும் படிக்க: ‘அண்ணே, அண்ணே ஸ்டாலின் அண்ணே’- பாட்டுப்பாடி ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம்!


    தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து  குளிர்சாதன வாகனம் மூலம்  தடுப்பூசி மருந்துகளை சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர். தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: