தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.
மேலும் தமிழ்நாடு அரசும்
தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது.ஆனால்
தடுப்பூசிகள் இல்லாமல் பல இடங்களில் முகாமங்கள் மூடப்பட்டு இருந்தன. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 1 கோடியே 69 லட்சத்தி 26 ஆயிரத்தி 880 கோவிட்ஷில்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகளும் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர்
தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளனர்.
புனேவில் இருந்து ஐதரபாத் வழியாக சென்னைக்கு 31 பெட்டிகளில் 3 லட்சத்தி 62 ஆயிரத்தி 410
தடுப்பூசிகள் வந்தன.விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதேப்போல் விமானத்தில் வந்த 14 பெட்டிகளில் 1 லட்சத்தி 68 ஆயிரம் டோஸ் கோவிட்ஷீல்டு
தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்திற்கான தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.