தமிழகத்தில் 400க்கும் மேலான திரையரங்குகளுக்கு உரிமம் இல்லை - திருச்சி ஸ்ரீதர்

திரையரங்கு

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் 1,000 திரையரங்குகளில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஊரடங்கு காரணமாக உரிமங்களை புதுப்பிக்காமல் உள்ளனர்.

  • Share this:
இன்னும் சில நாட்களில் திரையரங்குகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திரையரங்குகளுக்கான உரிமங்களை உடனடியாக புதுப்பித்து தரவேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திரையரங்குகள்  செயல்படுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அதற்கான உரிமத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும். இந்த புதுப்பித்தலுக்கான கால அவகாசத்தை ஓர் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் புதுப்பிக்கும் வழி முறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீதர்


தற்போது புதிய ஆட்சி அமைந்து இருக்கக் கூடிய சூழலில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி திருச்சி ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read:   உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் 1,000 திரையரங்குகளில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் ஊரடங்கு காரணமாக உரிமங்களை புதுப்பிக்காமல் உள்ளனர். இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்வு திரையரங்குகளுக்கு விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படி உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் சினிமா துறை கடுமையாக பாதிக்கப்படும் என திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே மற்ற துறைகளுக்கும் மானியம் வழங்குவது போல திரைத்துறைக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மானிய தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Published by:Arun
First published: