திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலை வாகனம் கவிழ்ந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் (பரிதா கிளாசிக்) ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் 40-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை தொழிற்சாலைக்கு சொந்தமான மினி வேனில் வீடு திரும்பிய நிலையில், வாகனம் ஆம்பூர் அடுத்த பாப்பனப்பள்ளி என்ற பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணம் செய்த 44 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன், செந்தில்குமார் மற்றும் நகர பொறுப்பாளர் சாரதி குமார் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவரிடம் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், அதிக ஆட்களை ஏற்றி வந்ததால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும் இதில் 37 பேர் படுகாயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வேனில் அதிக ஆட்களை ஏற்றி வரக்கூடாது என கூறியிருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக ஆட்களை ஏற்றி வந்ததால் இதுபோன்ற விபத்து நடந்ததாக கூறிய மாவட்ட ஆட்சியர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எனவே தொடர்ந்து விபத்து நடைபெறுவதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Must Read : குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற பெண்.. தவறான சிகிச்சையால் உயிரிழப்பு...
மேலும் விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில்லும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிக ஆட்களை ஏற்றி வந்ததால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - M.வெங்கடேசன், திருப்பத்தூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Injured, Road accident, Tirupattur