ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன

கொரோனா தடுப்பூசி

புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 4,36,000 தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை  வந்தன.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது.இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளாா். மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.

    மேலும் தமிழக அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து சிறப்பு முகாமில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது. இதனால் தடுப்பூசிகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக  அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

    தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 1 கோடியே 17 லட்சத்தி 18 ஆயிரம் கோவிட்ஷில்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகளும் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடியே 10 லட்சத்தி 34 ஆயிரம் பேர் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து ஜுன் மாதத்தில் 42,58,000 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில் காலை ஜதரபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 13 பெட்டிகளில் 60 ஆயிரம் கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்தன.
    விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதுப்போல் புனேவில் இருந்து விமானத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்த 9 பெட்டிகளில் 1 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. விமான நிலையத்தில் இருந்து தடுப்பூசிகள் தேனாம்பேட்டை மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    மத்திய தொகுப்பில் 23 பெட்டிகளில் வந்த 2 லட்சத்தி 76 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே நாளில் 4,36,000 தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளை பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: