வாக்குரிமை இழந்த திருச்சி மக்கள்... செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்...?

வாக்குரிமை இழந்த திருச்சி மக்கள்... செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்...?
வாக்குரிமையை இழந்த மக்கள்
  • News18
  • Last Updated: December 6, 2019, 4:32 PM IST
  • Share this:
உள்ளாட்சி தேர்தல் தற்போது பேசு பொருளாகியுள்ள நிலையில் திருச்சியில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் சாலையில் உள்ள இந்திரா நகரில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் 144 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர்.

மழைக்காலங்களில் வெள்ள நீர் உட்புகுந்து பாதிப்பு, ராணுவத்தினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், மாற்று இடம் கேட்டு மாவட்ட நிர்வாகம், முதலமைச்சரின் தனிப்பிரிவையும் அணுகினர்.


இதையடுத்து கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டு, அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இப்பகுதியைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டவர்கள், கடந்த மக்களவைத் தொகுதியில் இந்திரா நகர் முகவரியில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் திருச்சி மாநகரில் வாக்களித்தனர்.

இந்நிலையில், முகவரி மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்கள் இன்னும் கிடைக்காத காரணத்தால், நாகமங்கலம் முகவரியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை.

ஆனால், இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் யாரும் வசிக்கவில்லை என்பதால், இங்கிருந்த 144 குடும்பங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கடந்த 29-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும், இந்த உள்ளாட்சி தேர்தலில் பழையபடி திருச்சி மாநகரிலேயே வாக்களிக்க செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள், கடந்த 2-ம் தேதி திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரின் வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர்.

அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததால், குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை பெட்டியில் போட்டு வீடு சென்றனர்.

வாக்காளர் பட்டியலில் முகவரி சான்றுடன் விண்ணப்பிக்க கடந்த 4-ம் தேதியுடன் காலக்கெடு முடிந்த நிலையில், 350-க்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய இடத்திற்கு சென்றதற்கான சான்றிதழ் கிடைக்காமல் அங்கும் வாக்காளராக சேர முடியவில்லை. நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக வசித்த பழைய இடத்திலும் பெயர் நீக்கப்பட்டு நாட்டாற்றில் விடப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு வாக்குரிமை வேண்டும்.

அதுவரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
நூறு விழுக்காடு வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்
தேர்தல் ஆணையம் வாக்குரிமை இழந்த இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading