முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அசுரன் பட பாணியில் சாட்சிகளை மிரட்ட வந்த கல்லூரி மாணவர்கள் கைது!

அசுரன் பட பாணியில் சாட்சிகளை மிரட்ட வந்த கல்லூரி மாணவர்கள் கைது!

நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்

நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள்

25 பேர் மீதும் மிரட்டல், நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்தது, கூட்டம் கூட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அசுரன் திரைப்படத்தில் வருவது போல, திருவள்ளூர் நீதிமன்றத்தில் சாட்சிகளை மிரட்ட வந்ததாக 25 கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தங்கராஜ் என்பவரை ராஜேஷ் என்பவரின் ஆதரவாளர்கள் மேல்மணம்பேடு கிராமத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். தங்கராஜின் சகோதரர் வெங்கட்ராமனையும் 2018-ம் ஆண்டு ராஜேஷ் ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. புதன்கிழமை விசாரணையில் ராஜேஷுக்கு எதிராக மேல்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் சாட்சி சொல்வதற்காக நீதிமன்றம் வந்தார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஒரு கல்லுாரியைச் சேர்ந்த விஷ்ணு, மணிகண்டன், அருண்குமார், சூர்யா, சக்தி, ஜீவா உள்ளிட்ட 25 மாணவர்கள் குவிந்திருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் தீவிரமாக விசாரித்தனர், தீவிர விசாரணையில், அவர்கள் கஜேந்திரனை மிரட்ட வந்ததாகத் தெரியவந்தது.

25 பேர் மீதும் மிரட்டல், நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்தது, கூட்டம் கூட்டியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Also see...

First published:

Tags: Asuran