கேரளாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5,000ஐ கடந்தது; ஒரே நாளில் 22,000 பேருக்கு பாசிட்டிவ்!

கேரளாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5,000ஐ கடந்தது; ஒரே நாளில் 22,000 பேருக்கு பாசிட்டிவ்!

கொரோனா பரவல்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது.

  • Share this:
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் சமீப நாட்களில் கடுமையாக அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று 19,577 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 22,414 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரையில்லாத புதிய உச்சமாகும்.

இந்தியாவில் உச்சம் தொட்டுள்ள கொரோனா பரவல் தென்னிந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது, கேரளாவில் சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீபத்திய நாட்களில் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது.

கண்ணூர், மலப்புரம், காசர்கோடு, பாலக்காடு மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் பாசிட்டிவிட்டி ரேட் 20% அதிகமாக இருப்பதால் அங்கு மட்டும் தீவிர மான நோய்க்கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு உத்தரவிடும் என கூறப்படுகிறது.

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 22,414 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,35,631 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது.

இதனிடையே மாநிலத்தில் 9,735 ஐசியூ படுக்கைகள் இருப்பதாகவும், 219.22 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் இரவு நேர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்துக்கு தடை இல்லை எனவும், அத்யாவசிய தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் எனவும் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படும் எனவும் இதில் நிகழ்ச்சி அமைப்பாளர்களை தவிர யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: