சென்னை மாநகராட்சியில் 22.58 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!

தீபாவளி பண்டிகைக்காக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19,585 பேர் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 22.58 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!
பட்டாசு குப்பைகளை அகற்றும் போது
  • News18
  • Last Updated: October 28, 2019, 4:32 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 22.58 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தேதிகளில் 15 மண்டலங்களில் 22.58 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவு குப்பைகள் கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்குள்ள அபாயகரமான கழிவுகள் மையத்தில் பட்டாசு குப்பைகள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதற்காக மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19,585 பேர் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: October 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading