• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் 20 இடங்களில் மறியல் போராட்டம் - 2,000க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில் 20 இடங்களில் மறியல் போராட்டம் - 2,000க்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில் போராட்டம்

திருச்சியில் போராட்டம்

திருச்சி மாநகரத்தில், தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

  • Share this:
மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச்  சட்டங்கள், மின்சார திருத்த சட்டம்,  தொழிலாளா் விரோத 4−சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெற வேண்டும். விவசாய உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை நிர்ணயம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 9 மாவட்டங்களுக்கு மேலாக டெல்லியில் போராடி வரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, அகில இந்திய அளவில் பாரத் பந்த் அறிவித்தது.

இதன்படி, திருச்சி மாநகரத்தில், தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.  திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க். கம்யூ, மக்கள் அதிகாரம், LPF, CITUC, AITUC  உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, அனைத்து கட்சியினரும் இணைந்து மேலரண் சாலை பூம்புகார் விற்பனை நிலையத்திலிருந்து  ஊர்வலமாக சென்று தெப்பக்குளம் தபால் நிலையத்தை  முற்றுகையிட திட்டமிட்டனர்.

பின்னர் திடீரென தொமுச,  திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர்  மட்டும் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தி, அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். அவர்களைத் தடுத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க். கம்யூ, மக்கள் அதிகாரம் CITUC, AITUC உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர்  பேரணி, முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்,  போலீசாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கேயே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களையும் போலீசார் கைது செய்தன.

திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து 150 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல, திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மணப்பாறை ஒன்றியத்தில் மணப்பாறை, புத்தாநத்தம், மறவனூர், மருங்காபுாி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி, வளநாடு கை காட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை, கொப்பம்பட்டி, வையம்பட்டி மற்றும், துறையூா், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மண்ணச்சநல்லூா், லால்குடி, மணிகண்டம், புள்ளம்பாடி ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன.

Must Read : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு மற்றும் திமுக, இடதுசாாி அமைப்புகளின்  தலைமையிலான அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: