• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அத்திவரதர்: இதுவரை 16 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் தரிசனம்!

அத்திவரதர்: இதுவரை 16 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் தரிசனம்!

அத்திவரதர்

அத்திவரதர்

முதியோர், கர்ப்பிணிகள் விடுமுறை நாட்களைத் தவிர்த்து வார நாட்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்

  • News18
  • Last Updated :
  • Share this:
அத்திவரதரை தரிசிக்க ஒரு போதும் கட்டண சேவை திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். கடந்த 13 நாட்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அத்திவரதரை தினமும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த 13 நாட்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருங்காலங்களில் பக்தர்கள் நெரிசல் இன்றி சேவை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் முதியோர், கர்ப்பிணிகள் விடுமுறை நாட்களைத் தவிர்த்து வார நாட்களில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அத்திவரதரை தரிசிக்க ஒரு போதும் கட்டண சேவை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க... PHOTOS: அத்தி வரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்த குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: