Christmas: சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல்!

அதிவேகமாக செல்லும் காரில் வெளியில் வந்து கூச்சலிடும் பெண்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி  பைக் ரேஸ்-ல் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சாந்தோம் புனித தோமையார் பேராலயத்திலும் கொண்டாட்டம் களைக்கட்டியது.

இந்நிலையில் இரவு சிறப்பு பிரார்த்தனை முடித்து பேராலயத்தில் இருந்து வெளியேறிய இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

காமராஜர் சாலையில் காரில் பயணித்த இளம் பெண்கள் இருவர் அதிவேகமாக கார் சென்றுக்கொண்டிருக்கும் போதே காரின் பின்புற இருக்கையில் இருந்து வெளியே வந்து  கூச்சலிட்டு ஆடியது காண்போரை அச்சப்படவைத்தது.

இளம் பெண்களை படம் பிடிக்க அந்த காரை பின் தொடர்ந்து அதிவேகமாக பைக்கில் வந்த மூன்று பேர் அந்த பெண்களை செல்போனில் படம் எடுத்தனர்.

இந்த காட்சிகள் அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.



இது குறித்த தகவல் அறிந்து ஆர்.கே சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ் சங்கர் சஞ்சய் தலைமையிலான போலிசார் அதிவேகமாக பைக் ஓட்டிய 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் தேஷ் சங்கர் கொண்டாட்டங்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்றும் எதிர்வரும் புத்தாண்டில் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர்கள் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் மீறி பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: