கரூரில் நள்ளிரவில் திமுக - அதிமுகவினர் மோதல் : 10 க்கும் மேற்பட்டோர் காயம்

அதிமுக-திமுகவினர் இடையே மோதல்

நள்ளிரவில் கரூரில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனவர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 • Share this:
  கரூரில் நள்ளிரவில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனவர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும்,  அதிமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர்.

  இந்நிலையில் கரூர் மேற்கு நகர திமுக துணைச் செயலாளர் கார்த்திகேயன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது, அங்கு வந்த அதிமுக தெற்கு நகர செயலாளர் ஏகாம்பரம்  மற்றும் அவருடன் வந்த  சிலர்  கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இரு தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயனின் கார்  கண்ணாடியை ஏகாம்பரம் உடைத்துள்ளார்.

  இந்த நிலையில், வீடு திரும்பிய கார்த்திகேயனை பின்தொடர்ந்து வந்த ஏகாம்பரம் மற்றும் 40க்கும் மேற்பட்டோர்  கார்த்தியின் வீட்டு மீது கற்களை எறிந்து, வீடு புகுந்து தாக்கி உள்ளனர்.  இதில் கார்த்திகேயன், கேசவன்,  உதயமூர்த்தி, சாந்தகுமார்,  சின்னப்பன் ஆகிய 5 பேர் படுகாயத்துடன்  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  அதிமுகவினரின் கொலை வெறி தாக்குதலை படம் எடுத்த சாந்தகுமாரின் செல்போனை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பாதிக்கப்பட்ட கார்திகேயனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

  இந்த நிலையில்,  திமுகவினர் தாக்கியதாக கூறி அதிமுக தரப்பில்  5க்கும் மேற்பட்டோர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

  இதே போல, நேற்று இரவுகிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்டசாத்தூவார்பட்டியில் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட  திமுகவினரை, அதிமுகவினர் தாக்கியதாக  புகார் எழுந்துள்ளது.

  அதேபோல, கடவூர் அருகே திமுக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், திமுகவை சேர்ந்த சுப்பையா மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Must Read : வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் அதிமுக பணப்பட்டுவாடா - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

   

  அரசியல் காரணமாக நள்ளிரவில் நடத்த அடிதடி பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  - செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
  Published by:Suresh V
  First published: