அதிமுக ஆட்சியில்தான் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன: அமைச்சர் வேலுமணி

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 550 மேம்பாலங்களும் 2017 முதல் தற்போது வரையிலான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 304 மேம்பாலங்களும் கட்டப்பட்டதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில்தான் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன: அமைச்சர் வேலுமணி
அமைச்சர் எஸ்பி வேலுமணி
  • News18
  • Last Updated: July 15, 2019, 1:16 PM IST
  • Share this:
அதிமுக ஆட்சி காலங்களில்தான் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் சாலையை கடக்க அதிகம் சிரம படுவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, மத்திய கைலாஷ் மற்றும் ராஜீவ் காந்தி சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டுதான் அந்த பகுதியில் “எல்” வடிவ மேம்பாலம் அமைக்க உள்ளதாகவும், மக்களின் கருத்து கேட்டறிந்து , விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


மேலும் விரைவில் அந்த மேம்பாலம் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டபின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கூறினார். அதன் பின்னர் நடை மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் பதிலளித்தார்.

அதன் பின்னர் பேசிய மா.சுப்பிரமணியன், சைதை தொகுதியில் திமுக ஆட்சி காலங்களில் மட்டுமே மேம்பாலம் அமைக்கப்படுவதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சியை காட்டிலும் அதிமுக ஆட்சி காலங்களில்தான் அதிகமான மேம்பாலங்கள் கட்டப்பட்டன. 2006 முதல் 11-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் வெறும் 58 மேம்பாலங்கள்தான் கட்டப்பட்டது என்றும் 2011 முதல் 16-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 550 மேம்பாலங்கள் கட்டப்பட்டது என்று கூறினார்.மேலும் 2017 முதல் தற்போது வரையிலான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 304 மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க... சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading