Eid Mubarak 2019: இன்று ரம்ஜான் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்!

Eid-ul-Fitr 2019: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், பள்ளி வாசல்களில் அதிகாலையில் இருந்தே சிறப்பு தொழுகை தொடங்கியுள்ளது.

Eid Mubarak 2019: இன்று ரம்ஜான் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்!
Eid-ul-Fitr 2019: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், பள்ளி வாசல்களில் அதிகாலையில் இருந்தே சிறப்பு தொழுகை தொடங்கியுள்ளது.
  • News18
  • Last Updated: June 5, 2019, 2:11 PM IST
  • Share this:
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்பு தொழுகைகளை நடத்துகின்றனர்.

புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்த இஸ்லாமியர்கள், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ஏழை எளியோருக்கு உதவி செய்து ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர். நோன்பின் கடைசி நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி, தமிழகத்தில் நேற்று பிறை தெரிந்ததையடுத்து, இன்று ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப், தூத்துக்குடி, வேலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்றும் அதனால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.


ரமலான் திருநாள்


தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், பள்ளி வாசல்களில் அதிகாலையில் இருந்தே சிறப்பு தொழுகை தொடங்கியுள்ளது.

Also see... தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் 4000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்: மெல்ல அழிந்து வரும் அவலம்
Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading