தொழில்முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தை, எட்டாயிரம் கோடி ரூபாயில் இருந்து 25 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டு லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு குறைந்தது தொடர்பாக விளக்கமளித்த செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியே தவறு செய்தாரா என்று வினவியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தவறு செய்தது யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Also Read : பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒன்றரை லட்ச ரூபாயை பறிகொடுத்த அப்பாவி மனிதர்!
மேலும் இயக்குனர் தங்கர்பச்சானின் கோரிக்கை, மாதாந்திர மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை படிப்படியாக, நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் தேர்தலின் போது திமுக கொடுத்த மாதம் தோறும் மின்கட்டணம் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.