Home /News /tamil-nadu /

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த ஆண்டு சற்று தாமதமாக  தொடங்கும் தென் மேற்கு பருவ மழை, கடந்த ஆண்டு மே 29-ம் தேதி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வரும் ஜூன் 6-ம் தேதி கேரளாவில் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் துவங்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மே 19 மற்றும் 20-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் அதற்கான சூழல் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சில நாட்கள் தாமதமாக துவங்குகிறது.

முன்னதாக கடந்த 15-ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முதற்கட்ட நீண்ட கால முன்னறிவிப்பில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட கால முன்னறிவிப்பில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 96 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சற்று தாமதமாக  தொடங்கும் தென் மேற்கு பருவ மழை, கடந்த ஆண்டு மே 29-ம் தேதி தொடங்கியது. பொதுவாக மே கடைசி வாரத்தில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... குடிநீருக்காக தூக்கத்தைத் தொலைத்த சென்னை மக்கள்

Also see...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Indian Meteorological Center, Meteorological Center

அடுத்த செய்தி