தஞ்சாவூரில் வீட்டுக்குள் புகுந்து கைக்குழந்தையை தூக்கிச் சென்ற குரங்கு: தண்ணீரில் வீசியதால் உயிரிழந்த சோகம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் பிறந்து 8 நாட்களே ஆன இரட்டை பெண் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு. ஒரு குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள அகழியில் தூக்கி போட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளது.

 • Share this:
  தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் வேலை செய்து வரும், இவருக்கு புவனா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்கு தஞ்சை ராசா அரசு மருத்துவனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுடன் வீட்டில் அவரது மனைவி புவனா இருந்த நிலையில், இன்று பிறபகல் புவனா கழிவறைக்கு சென்ற போது, வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்ற குரங்கு இரட்டை குழந்தைகளை தூக்கி சென்றுள்ளது. அப்போது  சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த தாய் கத்தவே, ஒரு குழந்தையை ஓட்டில் போட்டு விட்டு, மறு குழந்தையை வீட்டின் பின்னே உள்ள பெரிய கோட்டை அகழியில் தூக்கி போட்டு விட்டு சென்றுவிட்டது.

  குழந்தையை வெகுநேரம் தேடிய உறவினர்கள், அகழியில் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  எனவே இதுபோன்று விபத்து இனிமேல் ஏற்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: