Home /News /tamil-nadu /

இடது கை சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு - சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை (வீடியோ)

இடது கை சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு - சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை (வீடியோ)


இடது கை சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு

இடது கை சிதைந்து மரண வேதனையில் உணவு தேடும் குரங்கு

பொள்ளாச்சி அருகே வாகனத்தில் அடிபட்டு கையில் எலும்பு தெரியும் அளவிற்கு காயத்துடன் சுற்றித்திரியும் குரங்குக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியாறு அணைப் பகுதியில் குரங்குகள் அதிகளவு சுற்றித் திரிகின்றன. கொரோனா ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி ஆழியாறு அணைப்பகுதி வெறிச்சோடி காணப்படுவதோடு, அங்குள்ள குரங்குகளும் உணவின்றி வயிறு காய்ந்து திரிகின்றன.

    உணவைத் தேடி அங்குமிங்கும் ஓடித் திரியும் குரங்குகள், அவ்வப்போது வாகன விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனத்தில் அடிபட்ட பெண் குரங்கு ஒன்றுக்கு இடது கை சிதைந்து, எலும்பு வெளியே தெரிகிறது.

     

    மரண வேதனையோடு, உணவைத் தேடியும் அலையும் அந்த குரங்கை பார்க்கும் பொதுமக்கள் பரிதாபப்பட்டாலும், சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் அந்த குரங்கை பிடித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உணவின்றி சுற்றித் திரியும் குரங்கு உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Monkey, Pollachi

    அடுத்த செய்தி