• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட கூட்டத்தில் புகுந்து குரங்கு அட்டகாசம்!

அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட கூட்டத்தில் புகுந்து குரங்கு அட்டகாசம்!

அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தில் குரங்கு

அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தில் குரங்கு

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய இந்த கூட்டத்தில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுக்கோட்டையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டத்தில், குரங்கு ஒன்று புகுந்து ஆங்காங்கே தாவியதால் அதிகாரிகள் பீதிக்குள்ளாகினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஜா புயல் நிவாரண பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டம் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பேசி கொண்டிருந்தபோது, கூட்ட அரங்கிற்குள் புகுந்த குரங்கு ஒன்று ஆங்காங்கே தாவியது. இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அந்த குரங்கு நீண்ட நேரம் அங்கு உள்ள ஏசியிலும் மேஜைகளிலும் ஆட்டம் போட்டதால் அதிகாரிகள் பயந்து அலறினர். மேலும் கூட்டரங்கில் புகுந்த குரங்கை விரட்ட முயற்சிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அமர்ந்திருந்த டேபிள் முன்பு குதித்து அரங்கில் உள்ள ஜன்னல் கதவு வழியாக வெளியேறியது. இதனால் அந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also see... மனிதர்கள் மட்டுமல்ல கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவிக்கின்றது

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: