Home /News /tamil-nadu /

உடும்பை பிடித்து சமைத்து சாப்பிட்டு டிக் டாக் வெளியிட்ட 6 பேர் கைது!

உடும்பை பிடித்து சமைத்து சாப்பிட்டு டிக் டாக் வெளியிட்ட 6 பேர் கைது!

கைதான 6 பேர்

கைதான 6 பேர்

1972-ம் ஆண்டின் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து சரவணன், பொன்னர், செல்வகுமார், இரஞ்ஜித் குமார், லோகநாதன், சூர்யா ஆகிய 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    உடும்பை வேட்டையாடி துன்புறுத்தி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு அதை சமைத்தும் தின்றதாக 6 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கொரோனா அச்சத்தால் நாடே முடங்கிக் கிடக்க, மக்கள் வீடுகளுக்குள் இருப்பது தான் சிறந்த தடுப்பு முறையாக அமையும் என்று கூறி அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. மேலும் தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வர வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சோலையம்மாபட்டியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு சென்று உடும்பு ஒன்றை வேட்டையாடி, பின்னர் அந்த உடும்மை பிடித்து ‘வேட்டைக்காரன் பரம்பரைடா’ என்ற பாடலோடு டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மற்றொரு டிக் டாக் வீடியோவில் அந்த உடும்பின் பின் கால்களை கட்டி விட்டு மரத்தில் ஏற வைப்பது போன்று பதிவிட்டுள்ளனர்.

    இதையடுத்து அந்த உடும்புக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் வனத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதை அடுத்து மணப்பாறை வனத்துறை அதிகாரிகள் சோலையம்மாபட்டிக்கு சென்று உடும்பை வேட்டையாடி சாப்பிட்டு டிக்டாக்கில் பதிவிட்ட 6 பேரையும் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் 1972-ம் ஆண்டின் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து சரவணன், பொன்னர், செல்வகுமார், இரஞ்ஜித் குமார், லோகநாதன், சூர்யா ஆகிய 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    அடுத்த செய்தி