Home /News /tamil-nadu /

வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி... பெண் உட்பட இருவர் கைது!!

வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி... பெண் உட்பட இருவர் கைது!!

வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் வினோத்(35). இவர் தனது முகநூல் பக்கத்தில் வெளிநாடு சொகுசு கப்பலில் தங்களுடைய தகுதிக்கேற்ப வேலை வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய குட்லீப் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றுள்ளார்.

வினோத்தை நேர்காணல் நடத்திய அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜா மற்றும் அவரது உதவியாளர் திவ்யபாரதி ஆகிய 2 பேரும் வினோத்திடம் வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு லட்சம் பணத்தை கம்பெனியின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

வினோத் இதனை நம்பி கடந்த மாதம் 27 ஆம் தேதி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் இதுவரை வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்தது வினோத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆயிரம் விளக்கு போலீசார் இரண்டு நபர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் பூந்தமல்லியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் நேரடியாக பூந்தமல்லி சென்று ராஜா( 35), மற்றும் திவ்யபாரதி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இவர்கள் இதுவரை 43 நபரிடம் ரூ.48,80,000 ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்பினர்.

Also read: உரிமையாளர்களுக்கே தெரியாமல் காரை அடகுவைத்து மோசடி: டிராவல்ஸ் அதிபர் கைது!
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai, Money Laundering, Scam

அடுத்த செய்தி