• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இவர்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ- வேலைவாங்கித் தருவதாக போலி ஆளைக் காட்டி பெண்ணிடம் ரூ.7 லட்சம் பணமோசடி

இவர்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ- வேலைவாங்கித் தருவதாக போலி ஆளைக் காட்டி பெண்ணிடம் ரூ.7 லட்சம் பணமோசடி

Youtube Video

சென்னையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ என ஆள் மாறாட்டம் செய்து, மோசடி நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னையை ஒட்டிய மாதவரம் பால் பண்ணை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காயத்ரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சத்யநாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் தம்பி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட சத்யநாராயணன், அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கு நெருக்கமானவர் என கூறி கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏழு லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பின்பு, செல்லூர் ராஜூ கையெழுத்திட்டதாக போலி நியமன ஆணை ஒன்றையும் காட்டியுள்ளார். அதோடு நிற்காமல், காயத்ரியை கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அதிமுக கரை வேட்டி கட்டிய ஒருவரைக் காட்டி அவர்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ என சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.

    அதை நம்பிய, காயத்ரியும் அவருக்கு மாலையும், சால்வையும் அணிவித்துள்ளார். பின்பு, கல்விச் சான்றிதழ் பின்புறமாக கூட்டுறவு வங்கி முத்திரையை அச்சிட்டு வேலை உறுதி என கூறி சத்ய நாராயணன் அனுப்பி வைத்துள்ளார்.

    நீண்ட நாட்களாகியும் பணிக்கான ஆணை எதுவும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காயத்ரி புகார் அளித்துள்ளார்.  செல்லூர் ராஜூ என யாரோ ஒருவரை காட்டி பண மோசடி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் சத்யநாராயணன், அவரது மனைவி ஷாலினி, உறவினர் தாமஸ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: