Home /News /tamil-nadu /

ரூ.2 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை தாய் விற்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்

ரூ.2 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை தாய் விற்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்

மாதிரி படம்

மாதிரி படம்

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை பணத்திற்காக விற்ற தாயிடமிருந்து பணத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் குழந்தையை விற்றுகொடுத்த இடைத்தரகரான ஜெயகீதாவை  வேப்பேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னையில் புழல் பகுதி காவாங்கரையைச் சேர்ந்த யாஸ்மின்(28). யாஸ்மினுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். இதையடுத்து யாஸ்மின் கர்ப்பமடைந்துள்ளார். யாஸ்மினுக்கு அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். யாஸ்மினுக்கு மூச்சு கோளாறு பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஜெயகீதா என்பவர் யாஸ்மினுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

    பின்னர், குழந்தையைக் கலைப்பது குறித்து ஜெயகீதாவிடம் யாஸ்மின் கேட்டுள்ளார். இதற்கு அவர் கருவைக் கலைக்க வேண்டாம். குழந்தை பிறந்த உடன் அதை அதிக விலைக்கு விற்று விடலாம் என கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு கடந்த 21ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஜெயகீதா இரண்டு நபர்களை அழைத்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு யாஸ்மினிடம் பணத்தைக் கொடுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த பணத்தை வாங்கிக் கொண்டு, தனது மகளுடன் யாஸ்மினா சென்றபோதுதான், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அந்த பணப்பையைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக யாஸ்மின் குழந்தையை வாங்கியவர்களே தன்னை நோட்டமிட்டு பணத்தை பறித்து சென்றதாகவும், தனது குழந்தையை மீட்டு தருமாறும் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்  குழந்தையை விற்றுகொடுத்த இடைத்தரகரான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா(49) என்பவரை வேப்பேரி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஜெயகீதா வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த திருவள்ளூரைச் சேர்ந்த சண்முகம்(எ) செண்பகம் (39) என்ற நபரை காவல் நிலையம் அழைத்த் வந்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி