ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

‘நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்’ – முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

எதிர்பாராத இயற்கை பாதிப்புகளின்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது – டிடிவி தினகரன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

  இதுதொடர்பாக தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

  "விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம் 16 % இருக்க வேண்டும் என்று தமிழக அரசு விவசாயிகளை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது.

  தற்போது பெய்யும் மழையினால் நெல்லின் ஈரப்பதம் 20 லிருந்து 25 சதவீதம் வரை உள்ளது. இத்தகைய எதிர்பாராத இயற்கை பாதிப்புகளின்போது, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 21% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போதும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் திமுக அரசு நடந்துகொள்வது சரியானதல்ல.

  எனவே, முதல்வர் இப்பிரச்னையில் நேரடியாகத் தலையிட்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை குறைந்தபட்சம் 21 % வரை உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."

  அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி... டெங்கு காய்ச்சலா?

  இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: TTV Dinakaran