இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்கவேண்டும் - திருவள்ளுவர் தின வாழ்த்தில் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி.

இந்தியா முழுவதும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களைக் கடந்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தனர்.

  நேற்று, பொங்கலுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  இந்தநிலையில் இன்று திருவள்ளுவர் தினத்துக்கு மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: