வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மணமக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி திருமண வாழ்த்துமடல் அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் ராஜசேகரன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என அழைப்பிதழை அனுப்பி வைத்தார்.
வரும் 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், ராஜசேகரன் வீட்டிற்கு புதுடெல்லியில் இருந்து பிரதமர் மோடி கையொப்பமிட்ட வாழ்த்து மடல் வந்தது.
அதில், தங்களின் மகள் திருமணத்திற்கு தன்னை அழைத்ததற்கு நன்றி எனவும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
திருமண வாழ்த்து மடல் அனுப்பி பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாக ராஜசேகரன் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Also Watch: டாஸ்மாக்கில் கொள்முதல் விலையை விட 120 சதவிகிதம் அதிகம் விற்கப்படும் மதுபானங்கள்!
Published by:Anand Kumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.