ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விழுப்புரம் ஆசிரியை: நாய்க்கு உதவிய கோயம்புத்தூர் பெண் - மான் கி பாத்தில் தமிழ் பெண்களின் செயலைப் பாராட்டிய பிரதமர் மோடி

விழுப்புரம் ஆசிரியை: நாய்க்கு உதவிய கோயம்புத்தூர் பெண் - மான் கி பாத்தில் தமிழ் பெண்களின் செயலைப் பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்து நடக்க உதவி செய்த கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்ணை மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அனைந்திய வானொலியில் மனதில் குரல் என்ற தலைப்பில் உரையாற்றிவருகிறார். இன்று, 72-வது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இன்றைய நிகழ்வில் விலங்குகள் பாதுகாப்பு குறித்து அதிகமாகப் பேசினார். அப்போது அவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்களைப் பாராட்டியுள்ளார. நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘கோவையைச் சேர்ந்த காயத்ரி எனும் பெண், தனது தந்தையின் உதவியால், கால்கள் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்துள்ளார். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் இந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் நாம் காணலாம். டெல்லி, என்சிஆர் பகுதியில் வீடில்லாமல், தங்குமிடம் இல்லாமல் இருக்கும் விலங்குகளுக்கு இடங்களையும், உணவுகளையும், குடிநீரையும் வழங்க வேண்டும்.

  தமிழகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா பற்றி அறிந்தேன். விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார். ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, அதே பென் டிரைவில் பதிவேற்றம் செய்து, மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார். இதுபோன்ற கல்வி, மாணவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது’ என்று பாராட்டியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Mann ki baat, Modi