அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு

news18
Updated: April 16, 2018, 2:20 PM IST
அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தை சீர்குலைக்க முயற்சி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின்
news18
Updated: April 16, 2018, 2:20 PM IST
அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற கடந்த மார்ச் மாதம் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இதற்கு திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தோழமை கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செயல் தலைவர் ஸ்டாலின், வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வைகோ, கனிமொழி, திருமாவளவன், பேராசிரியர் காதர் மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மோடி ஆட்சிக்கு எதிராக அனைவரும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்துக்கு சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனக் கூறினார். மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் விரோத போக்கை மோடி அரசு கைவிடவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்