மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சியின்போது குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி..!

அவர் செருப்புகள் அணியாமலும் கைகளில் எந்தவித பாதுகாப்பு உறைகளுமின்றி அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளை முகச்சுழிப்புகள் இல்லாமல் அகற்றுகிறார்.

news18
Updated: October 12, 2019, 10:26 AM IST
மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சியின்போது குப்பைகளை அகற்றிய பிரதமர் மோடி..!
அவர் செருப்புகள் அணியாமலும் கைகளில் எந்தவித பாதுகாப்பு உறைகளுமின்றி அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளை முகச்சுழிப்புகள் இல்லாமல் அகற்றுகிறார்.
news18
Updated: October 12, 2019, 10:26 AM IST
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிங்பிக் சந்திப்பு மாமல்லபுரத்தில் இன்று இரண்டாவது நாளாக நடக்கிறது.  இன்றைய பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உறவுகள், எல்லைப் பிரச்னைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாமல்லபுர நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி காலையில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார். அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.அந்தப் பதிவில் ” 30 நிமிடங்களுக்கு மகாபலிபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி துப்புரவுப் பணியை மேற்கொண்டேன். அதில் சேகரித்த குப்பைகளை விடுதியின் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்தேன். மக்கள் புழங்கும் பொதுவெளிகள் தூய்மாக இருக்க உறுதி செய்வோம். அதேபோல் உடல் உறுதியும், ஆரோக்கியமும் காக்க முனைப்புடன் செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் என்ன ஆச்சரியமெனில் அந்த வீடியோவில் அவர் செருப்புகள் அணியாமலும் கைகளில் எந்தவித பாதுகாப்பு உறைகளுமின்றி அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளை முகச்சுழிப்புகள் இல்லாமல் அகற்றுகிறார்.

அவற்றை மொத்தமாக ஒரு பையில் சேகரித்து அந்த விடுதியின் ஊழியரிடம் ஒப்படைக்கிறார்.

பார்க்க :

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...