இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!

இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
  • News18
  • Last Updated: October 12, 2019, 8:56 AM IST
  • Share this:
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பின் 2வது நாளான இன்று எல்லை விவகாரம், கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 9.50 மணிக்கு ஜின்பிங், சென்னை விடுதியில் இருந்து புறப்பட்டு கார் மூலம், கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலுக்கு சென்றடைகிறார். அங்கு பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் காலை 10 மணிக்கு தனியாக சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேருக்கு நேர் எனக் கூறப்படும் இந்த தனிப்பட்ட சந்திப்பின் போது, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆழமான விவாதத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனைத்தொடர்ந்து 10.50 மணிக்கு இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

இந்தியாவில் சீனா மேற்கொள்ள உள்ள முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலும் நிராகரித்து விட முடியாது.

தொடர்ந்து 11.45 மணிக்கு ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி மதிய உணவளிக்கிறார். பின்னர் 12.45 மணிக்கு கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு புறப்படுகிறார்.அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு தனது இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா புறப்படுகிறார்.

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading