பெகாசஸ் உளவு செயலி குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்: திருமுருகன் காந்தி

சர்வதேச விசாரணை வேண்டும்: பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித்ஷாவோ மறுக்கவில்லை.. திருமுருகன் காந்தி

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை உளவு பார்த்து இருக்கிறது என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
இஸ்ரேல் நாட்டிடம் இருந்து  பெகாசஸ் என்ற உளவு செயலியை இந்தியா வாங்கவில்லை என இதுவரை மறுக்கவில்லை. அதனால்,
பெகாசஸ் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் உளவு பார்த்த பாஜக மோடி அரசை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சியின் தெகலான் பாகவி, மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Also read: ஐசிஎஃப்-ஐ தனியார்மயம் ஆக்குவதா? மத்திய அமைச்சரை சந்தித்த வைகோ; ’பாட்ஷா’ திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி,
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை உளவு பார்த்து இருக்கிறது.

இந்த பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித்ஷாவோ இதுவரை மறுக்கவில்லை. எனவே இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மக்களை பாதுகாக்காமல் மோடி, அமித் ஷா வின் அதிகாரத்தை பாதுகாக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

 
Published by:Esakki Raja
First published: