• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின்' - அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

'தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின்' - அமைச்சர் சேகர்பாபு புகழாரம்

MK Stalin

MK Stalin

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டின் நவீன ராமானுஜராக திகழ்கிறார்.

  • Share this:
    தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூட்டிப் பேசினார்.

    இந்து அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசியபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

    தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின்

    இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை உரையின் போது அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார்; கலைஞர் சட்டமாக்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டின் நவீன ராமானுஜராக திகழ்கிறார்.

    அமைச்சர் சேகர்பாபு உருக்கம்

    முதல்வரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இயற்கை என்னை இறுதியாக அழைக்கும் போது உங்கள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வர வேண்டும்” என மிகவும் உருக்கமாக பேசினார்.

    தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 641 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சொத்துகளை மீட்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

    Also Read: கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

    முந்தைய திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு 384 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது .ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வெறும் 332 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்..

    மேலும் இந்து சமய அறநிலையத் துறைக்கு தொலைக்காட்சி சேவை தொடங்குவது என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்த நிதியும் கடந்த ஆட்சியில் ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    Also Read:   பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு – பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி கோரிக்கை!

    இளைய நிலா, நாளைய நம்பிக்கை உதயநிதி

    முன்னதாக, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும்போது,  “இளைய நிலா, நாளைய நம்பிக்கை உதயநிதி . நாம் பட்டிருக்கும் அவமானம், அசிங்கம் ஒன்றா? இரண்டா?  இன்று கண்ணியமாக, கர்வம் இல்லாமல் அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்.

    நீங்கள் முதலமைச்சராக முடியாது என்று சொன்னவர், முகத்தை இந்த மன்றத்தில் முகத்தை பார்க்கமுடியவில்லை, என்று கூறினார்.

    அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

    மானிய கோரிக்கைக்கு வாருங்கள், மானிய கோரிக்கைகள் குறித்து மட்டும் பேசுங்கள் என கூறினார்.

    சட்டமன்றத்தில் தனிநபர் புகழாரம் சூட்டுவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவ்வப்போது திமுக உறுப்பினர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அவையில் பேசி வருவதும், அவ்வாறு பேச வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: