ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 நேரத்திற்கு 19 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை - வானிலை அலெர்ட்!

அடுத்த 3 நேரத்திற்கு 19 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை - வானிலை அலெர்ட்!

மழை

மழை

வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (25ஆம் தேதி) காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

First published:

Tags: Chennai rains, Rain updates, Tamil Nadu Rain, Weather News in Tamil