ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி வரை மழை... வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் டிசம்பர் 1-ம் தேதி வரை மழை... வானிலை மையம் எச்சரிக்கை!

மழை

மழை

Weather update | மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க | உதகையில் கடும் பனி மூட்டம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: MET warning, Rain, Weather News in Tamil